புதையல் தோண்டிய இராணுவத்தினர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

தொப்பிகல், தம்மின்ன வீதியில் உள்ள வலமண்டிய இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கும் புராதன இடம் ஒன்றில் புதையல் தேடி கற்பாறைக்கு கீழ் தோண்டிய இரண்டு இராணுவத்தினர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களை அரலகங்வில பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

வலமண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவத்தினரும் தெய்யத்தகண்டிய ,மாவனாவேல பிரதேசத்தை சேர்ந்த 4 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து நீர் இரைக்கும் இயந்திரம், மண் வெட்டி, அலவாங்கு, மற்றும் பூஜை பொருட்களை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Comments