அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் மட்டக்களப்பு மக்களுக்கு ஐம்பது வீடுகள்

Report Print Suman Suman in சமூகம்
106Shares

மட்டக்களப்பில் மாதிரி கிராமம் உருவாக்கும் திட்டத்திற்காக மட்டக்களப்பு கல்குடா தொகுதி மக்களுக்கு ஐம்பது வீடுகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று அமைச்சர் சஜித் பிரேமதாசவை அமைப்பாளர் வே.மகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி ஊழியர் சங்கத்தினர், இளைஞர் அமைப்பு தலைவர் தி.சிவநிதன், மகளிர் அமைப்பு தலைவி சசிகலா விஜயதேவா மற்றும் இணைப்பாளர் சாபீர் ஆகியோர் சந்தித்து மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை முன்வைத்துள்ளனர்.

அத்துடன்,மறைந்த முன்னாள் நிதியமைச்சர் கே.டப்ளியூ தேவநாயகம் ஞாபகார்த்தமாக மாதிரி கிராமம் அமைக்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைப்பாளர் வே.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐம்பது வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாவும் இவ்வீடுகள் முறக்கொட்டாஞ்சேனை மற்றும் கிரான் பிரதேச மக்களுகாக வழங்கவுள்ளதாகவும் அமைப்பாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments