சிறையிலுள்ள மகனை பார்க்க சென்ற தாய்க்கு நேர்ந்த கதி!

Report Print Vethu Vethu in சமூகம்
381Shares

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு சிம் அட்டை ஒன்றை வழங்குவதற்கு முயற்சித்த தாய் ஒருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புளை நீதவான் யூ.பீ.குலதுங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் தாயான கல்லேவலயில் வசிக்கும் 53 வயதுடைய வீ.அனுலாவத்தி என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் பாதணி ஒன்றின் நடு பகுதியை கிளித்து அதற்குள் சிம் அட்டையை நுழைத்துள்ளார். அந்த பாதணி ஜோடியை தம்புளை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தனது மகனுக்கு சிம் வழங்க முயற்சித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டு தம்புளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தம்புளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments