ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாள் வெட்டு..! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

Report Print Steephen Steephen in சமூகம்

அம்பலாங்கொடை மாமடல அக்கர அட்ட என்ற பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வாள் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அம்பலாங்கொடை மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயத்திற்கு உள்ளான பெண்ணொருவரின் கையில் மணிக்கட்டு பகுதி துண்டாகும் வகையில் வெட்டப்பட்டுள்ளதுடன் துண்டான பகுதியும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு பேர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் இந்த வாள் வெட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments