குளவி கொட்டுக்கு இலக்காகி 28 வயது இளைஞன் பரிதாப மரணம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
143Shares

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் இன்று பகல் 2.00 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் உயிரிழந்தவர் கிங்கொரா தோட்டத்தை சேர்ந்த ஜெபமாலை ஸ்டீபன் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த அந்தோனி செல்வம் வயது 34, ஞானசேகரன் கருணாநிதி வயது 25 என்பவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேயிலை கொழுந்தினை உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு வரும் போது திடீரென கலைந்த குளவிகள் இவர்களை சராமரியாக தாக்கியுள்ளதாகவும் இதனால் இவர்கள் மயக்கமுற்றதாகவும் அதனைத்தொடர்ந்தே பொதுமக்களால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments