யாழ்.குடாநாட்டில் போஞ்சிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதடதுடன், பனி காலத்திலேயே போஞ்சிச் செய்கைக்கு உகந்த காலமாகையால் டிசம்பர் மாதம் முதல் பங்குனி மாதம் வரை போஞ்சிச் செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்படுவது வழமையாகும்.
கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் போஞ்சிச் செய்கையை மேற்கொண்டவர்கள் தற்போது அதிலிருந்து விளைச்சலைப் பெற ஆரம்பித்துள்ளனர்.
இதனால், தற்போது யாழ்.குடாநாட்டின் திருநெல்வேலிச் சந்தை மற்றும் மருதனார்மடம், சுன்னாகம் உள்ளிட்ட பொதுச் சந்தைகளுக்கு போஞ்சி அதிகளவில் விவசாயிகளால் எடுத்து வரப்படுகிறது.
மேலும், முன்னர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சி தற்போது 60 ரூபா முதல் 70 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.