வவுனியா - பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஆறுமுகநாவலரின் சிலை இன்று(19) பிற்பகல் 3.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு காணாமல் போன உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட ஆறுமுகநாவலரின் சிலை காணாமல் போன உ றவுகளின் குடும்பங்களின் 17பேர் ஒன்றிணைந்து சர்வதேச பன்னாட்டு நிறுவனத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா தமிழ்மணி அகளங்கன், மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ். எஸ். வாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் காணாமல் போன உறவுகளுக்கு ஞாபகர்த்த அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.