வாரியபொல பஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தை இனந்தெரியாத நபரொருவர் தனது கையடக்க தொலைபேசி மூலம் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கிய நபரொருவர், பஸ் நிலையத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை தாக்கியுள்ள விதம் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, தாக்கி கீழே தள்ளப்பட்ட இளைஞர் மீது முச்சக்கர வண்டியொன்று ஏற முற்பட்ட நிலையில், சாரதி விரைவாக முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார்.
மேலும், இளைஞர் விநாடியில் உயிர் தப்பியுள்ளதுடன் தாக்கிய நபர், தான் வந்த முச்சக்கர வண்டியில் ஏறி தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,தாக்கப்பட்டதன் பின்னணி தொடர்பாக இது வரை தகவல் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.