அடைக்கப்பட்ட குளிர்பானத்திற்குள் கழிவுப்பொருள்! வவுனியாவில் விற்பனை

Report Print Thileepan Thileepan in சமூகம்
176Shares

வவுனியா, பசார் வீதியில் உள்ள பிரபல தனியார் சூப்பர் மாக்கட் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்திற்குள் கழிவுப் பொருள் காணப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா நகரசபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பசார் வீதியில் உள்ள பிரபல தனியார் சூப்பர் மாக்கட் ஒன்றில் சனிக்கிழமை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக பிளாஸ்ரிக் கப்பில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த நிகழ்வின் போது அவற்றை பரிமாற்றியுள்ளனர்.

இதன்போது அதனை திறந்து குடித்த சிலர் குளிர்பானத்தின் அடிப்பகுதியில் கழிவுகள் இருந்ததைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

பின்னர் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைச் செயலாளார் இ.தயாபரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, உடனடியாகவே சூப்பர் மாக்கட்டுக்கு சென்ற வவுனியா நகரசபை செயலாளர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் பெட்டி ஒன்றில் பொதி செய்யப்பட்டிருந்த கப்பில் அடைக்கப்பட்ட குளிப்பானங்களை கைப்பற்றியுள்ளனர்.

இன்று குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, இந்த வர்த்த நிலையம் முன்னர் ஒரு தடவை சீல் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments