மின்சார பாவனையாளர்களுக்கு விசேட சலுகை!

Report Print Kamel Kamel in சமூகம்
612Shares

இலங்கை மின்சாரசபை, பாவனையாளர்களுக்கு இலவசமாக எல்.ஈ.டி மின் குமிழ்களை வழங்க உள்ளது.

60 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை மாதாந்தம் பயன்படுத்துவோருக்கு இவ்வாறு எல்.ஈ.டி மின்குமிழ்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு வழங்கப்படும் மின் குமிழ்களுக்காக பாவனையாளர்களிடமிருந்து மாதாந்த கட்டணத்தின் ஊடாக பணம் அறவீடு செய்யப்படாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மின்குமிழ்களை பயன்படுத்துவதனால் மாதாந்தம் சேமிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு மின்குமிழ்களுக்கான செலவு ஈடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையினால் வழங்கப்பட உள்ள எல்.ஈ.டி மின் குமிழ்களுக்கு மூன்றாண்டுகள் உத்தரவாதம் வழங்கப்பட உள்ளது.

வறட்சியான காலநிலையின் போதும் மின்சாரத்தை தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Comments