திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு எதிராக, ரஞ்சன் ராமநாயக்க முறைப்பாடு!

Report Print Ramya in சமூகம்
44Shares

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளதாக ரஞ்சன், நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினால் 500 கியூப் மணல் அள்ளுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,குறித்த பகுதியில் இருந்து 61,000 கியூப் மணல் அள்ளப்பட்டுள்ளதாக ரஞ்சன் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து,ரஞ்சன் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கோரப்பட்டிருந்தது. இருப்பினும் அதற்கு அவர் நேற்றைய தினம் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

பிரதேச செயலாளரும் அவருக்கு ஆதரவளித்தவர்களுமே மன்னிப்புக் கோர வேண்டும்.

ஏனெனில் அவர்களே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

மணல் அகழ்வின்போது மோசடி இடம்பெற்றுள்ளது என்பதை உறுதி செய்வதற்கு ஒரே ஒரு ஆதாரம் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரியின் பணி நீக்கம் என்பதே என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments