வவுனியா பாவற்குளம், சூடுவெந்தபுலவு மற்றும் மாங்குளம் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்றைய தினம் (05) ஆரம்பித்து வைத்தார்.
வவுனியா, பாவற்குளம் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கான திட்டத்திற்கு அடிக்கல்லினை நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டி வைத்தார்.
அத்துடன் செட்டிக்குளம், மாங்குளம் மற்றும் சூடுவெந்தபுலவு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இவற்றுடன் செட்டிக்குளம், மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட உள்ளக வீதி ஒன்றிணையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பைஸர் காசிம், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.