யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் மீதும் வாளால் வெட்டப்பட்டுள்ளன.
இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு இவ்வாறு வாளால் வெட்டிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அத்துடன் இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகையினை சேதமாக்கியதுடன், மரத்திலான பெயர்ப்பலகையினையும் உடைத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.