சித்துல்பவ்வ ரஜமகா விகாரைக்கு அருகில் வாழ்ந்த நந்திமித்ர என்ற பிரபல யானை கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
குறித்த யானையுடன் வாழ்ந்த மற்றுமொரு யானையும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
நந்திமித்ர கடந்த நாட்களில் காயமடைந்தமையினால் அதிகம் பேசப்பட்ட ஒரு யானையாக காணப்பட்டது.
சித்துல்பவ்வ ரஜமகா விகாரைகயினால் உணவு வழங்குகின்றமையினால் இந்த யானை விகாரைக்கு அருகிலேயே வசிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனது.
அண்மையில் இந்த யானை காயமடைந்த போதிலும், வனவிலங்கு அதிகாரிகளின் தலையீட்டில் அதன் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
நந்திமித்ர யானை கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் அதனுடன் வசித்த வந்த யானை எவ்வித காயங்களின் அடையாளங்கள் இன்றி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமையினால் பாரிய சிக்கலான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.