யாழ். பெரியப்புலம் மகாவித்தியாலயத்தின் சமையல் கூடம் உள்ளிட்ட கட்டடத் தொகுதியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புச் சேவையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சமையல் கூட வளாகத்தினுள் தீயணைப்பு படையினரின் வாகனம் செல்லமுடியாத நிலை எற்பட்டமையினால் தீயணைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நீ்ண்ட நேரப் போராட்டத்தின் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.