அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பிய 15 மட்டக்களப்பு பெண்கள்

Report Print Steephen Steephen in சமூகம்
71Shares

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தமக்கு உதவியை வழங்க கோரி மட்டக்களப்பை சேர்ந்த 15 பெண்கள் சில அரச நிறுவனங்களுக்கு எழுத்துமூலமான கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த பெண்களின் உறவினர்கள் கடந்த போர் காலத்தில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன தமது உறவினர்களை பற்றி தகவல்களை தேடித் தருமாறு இந்த பெண்கள் மாவட்ட செயலாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திடமும் பெண்கள் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கடிதங்களின் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Comments