பங்களாதேஷில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிக்கு மன்னார் மாவட்ட மாணவர்கள் தெரிவு

Report Print Ashik in சமூகம்
68Shares

பங்களாதேசின் தலைநகரான டாக்காவில் இடம் பெறவுள்ள 4 ஆம் 'ரோல் போல்' (ROLL BALL) உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து நான்கு வீரர்கள் பங்களாதேசிற்கு பயணமாகவுள்ளனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை பங்களாதேசின் தலைநகரான டாக்காவில் 4 ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி யோ.திவ்வியா, மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் எஸ்.அருண், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஏ.திவ்வியா மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி எஸ்.அன்ரலின் ஆகிய வீரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Comments