கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு முடிவு கட்டும் வரை சிறப்பு வழிபாடு தொடரும்

Report Print Mohan Mohan in சமூகம்
38Shares

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் வெறிபெற வேண்டும் என்று சிறப்பு வழிபாட்டு பூஜை ஒன்று கேப்பாபுலவு மாதிரிகிராமத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழிபாடு கேப்பாபுலவு மாதிரிகிராம முத்து விநாயகர் ஆலைய குருக்கள் பரமேஸ்லரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழிபாடு பொதுமக்களின் காணிகள் மீளும் வரை தொடரும் என ஆலய பரிபாலனசபை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த 31ஆம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, விடிய விடிய முற்றுகை போராட்டம் பொது மக்களினால் இன்று வரை 7 நாட்களாக தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments