“கைகொடுப்போம், ஒன்றிணைவோம்” வவுனியாவில் விசேட விழிப்புணர்வு பேரணி

Report Print Theesan in சமூகம்

ரணில், மைத்திரியின் அரசு கல்வி, சுகாதாரத்தினை வீணடிக்கின்றது. உரிமைகளை வென்றெடுத்திட போராடுவோம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று விழிப்புணர்வு பேரணியொன்று இடம்பெற்றது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மருத்துவ பீட மாணவர்கள் ஒருங்கமைப்புச் செயற்பாட்டுக் குழு என்பன ஒன்றிணைந்து குறித்த பேரணியை முன்னெடுத்திருந்தன.

இந்நிகழ்வில் எமக்கு உங்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தில் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் வளர்ப்புத்தாயின் கவனிப்பு, எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை அடக்கு முறைகளின் கீழ் அச்சுறுத்தல், தன்மானமிழந்த நாம் நெருப்பாக்கப்பட்டு விட்டது போதும், போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி சுகாதாரம் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், மாலபே சைட்டத்திற்கு எதிராகவும், பாடசாலைகளில் பணம் அறவிடுவதற்கு எதிராகவும், மேலும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்தல் போன்ற நோக்கங்களுக்காகஇளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து இப்பேரணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments