அரச உத்தியோகத்தர்களுக்கான ஒருவாரகால உடற்பயிற்சிகள் ஆரம்பம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
52Shares

உடல் ஆரோக்கியத்தினையும், மகிழ்ச்சியையும் பேணும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒருவாரகால உடற்பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்று தொடக்கம் ஒருவார காலம் இடம்பெறவுள்ள இத் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காலை 9 மணியில் இருந்து 9.30 வரை அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலகங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அனைத்து அரச திணைக்களங்களிலும் இது ஒருவார காலம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார தலைமையில் உடற்பயிற்சி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments