உடல் நல தேசிய வாரத்தை முன்னிட்டு வீதிகளில் நடை பழகிய பிரதேச உத்தியோகத்தர்கள்

Report Print Reeron Reeron in சமூகம்
25Shares

"உடல் ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்" என்னும் கருப்பொருளில் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் விளையாட்டு மற்றும் உடல் நல தேசிய வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று செங்கலடியில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக நாடு முழுவதும், நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டம் இன்று தொடக்கம் ஒரு வார காலத்திற்கு தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

இச்செயற்றிட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உடற்பயிற்சி தொடர்பாக விழிப்பூட்டும் நோக்குடன் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் ஊழியர்கள் பிரதேச செயலகத்திலிருந்து பிரதான வீதியூடாக செங்கலடி சந்திவரை பயிற்சியில் ஈடுபட்டனர்.

Comments