பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் போராட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

அனைத்து பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிங்சங்க சம்மேளனம் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.

இந்த அடையாள பணி பகிஸ்கரிப்பு நாடாளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளதாக அதன் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இந்தப் பணி பகிஸ்கரிப்பு குறித்து விளக்கமளித்துள்ள அவர்,

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

ஆனால், தற்போது பெப்ரவரி மாதம் ஆகியுள்ள நிலையில், இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் மீறியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அடையாள பணி பகிஸ்கரிப்பு முன்னெடுப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில், நாளை நண்பகல் 12 மணிக்கு எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

Comments