கேப்பாப்புலவு மக்களுக்கான விசேட மருத்துவ சேவை

Report Print Mohan Mohan in சமூகம்
31Shares

காணிகளுக்காக போராடும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.

தமக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் உடல்நலம் கருதி விசேட மருத்துவ சேவை வசதிகள் எற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட மருத்துவ சேவைகளின் ஒரு கட்டமாக மக்களுக்கான வைத்திய பரிசோதனைகளும் இடம்பெற்றன.

இதேவேளை கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments