கடல் ஆமை முட்டைகளுடன் ஐவர் கைது

Report Print Nivetha in சமூகம்

கிளிநொச்சி - பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் கடல் ஆமை இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை வைத்திருந்த ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பள்ளிக்குடா பிரதேசத்தில் வைத்து வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 கிலோகிராம் கடல் ஆமை இறைச்சியும், 2.5 கிலோகிலோகிராம் முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட ஐவரும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட கடல் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகள் என்பனவும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

Comments