உயிரை பறித்த ஐஸ்கிரீம் வியாபாரம்..!

Report Print Nivetha in சமூகம்
962Shares

ஹட்டனில் ஜஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சற்றுமுன்னர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் உள்ள கலாசார மண்டபத்தில் திருமணம் ஒன்று நடைபெற்று வந்த நிலையில் ஐஸ்கிரீம் வியாபாரியொருவர் ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவ்விடத்திற்கு மற்றுமொறு ஐஸ்கிரீம் வியாபாரியும் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சண்டையில் முடிந்துள்ளதுடன் ஒருவர் மண்டபத்தின் படியிலிருந்து கீழே விழுந்தவாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மற்றைய ஐஸ்கிரீம் வியாபாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹட்டன் - சமலனகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய எஸ் தங்காராஜா என்பரே சம்பவத்தில் இவ்வாறு பலியாகியுள்ளார்.

Comments