மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வியைத் தொடரும் 5013 மாணவர்களுக்கு தைத்த சீருடைகள் வழங்கும் நிகழ்வு இன்று (06) எஸ்.கமலநாதன் தலைமையில் குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.
அதிகமான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்குரிய சீருடைகளைகூட தைத்துக் கொடுப்பதற்கு பெரும் சிரமத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் (MJF (Dilmah) நிறுவனமானது முன்வந்து சுமார் 5013 மாணவர்களுக்குமான சீருடைகளை தைத்து மாணவர்களுக்கு கையளித்தனர்.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க, பீ.எஸ்.எம்.சாள்ஸ், வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், ஓய்வுநிலை வலய கல்வி பணிப்பாளர் கே.சத்தியநாதன், பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், MJF (Dilmah) நிறுவன தலைவர் மரில் ஜே பெர்னாண்டோ, முகாமைத்துவ பணிப்பாளர்கள் டில்கான் பெர்னாண்டோ, மலிக் பெர்னாண்டோ, பாஸ்டர் .று.மரியதாஸ் என பலர் கலந்து கொண்டனர்.