வெலிபென்ன மீகம பிரதேசத்தில் இன்று மதியம் நடந்த வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மீகம தொட்டுபொல வீதியில் வந்த முச்சக்கர வண்டி மீகம 5 ஆம் கட்டை பிரதான வீதிக்குள் பிரவேசிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வண்டியுடன் மோதியுள்ளது.
சம்பவம் குறித்து வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.