சிவில் விமான சேவை அதிகார சபையின் விமான சேவை பரிசோதனை அதிகாரிகளுக்கு உரிய முறையில் விமான நிலைய அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து கொடுக்காத காரணத்தினால் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அரசை பிரதிநிதித்துப்படுத்தி சிவில் விமான சேவை அதிகார சபை பரிசோதனையாளர்களுக்கு வழங்கும் விமான நிலைய அனுமதிப்பத்திரம் 2016 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் கலாவதி ஆகியுள்ளது.
இதன் காரணமாக பரிசோதனையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தேடிப்பார்க்க சட்டப்படி விமான நிலையம் மற்றும் விமானங்களுக்குள் செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
கடந்த நாட்களில் விமான நிலையத்தில் சந்தேககத்திற்கு இடமான சம்பவங்கள் நடந்துள்ள போதிலும் அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் எவ்வித சட்டரீதியான பரிசோதனைகளை சிவில் விமான சேவை அதிகார சபையினால் மேற்கொள்ள முடியாது போயுள்ளதாக கூறப்படுகிறது.