காக்கைதீவு சந்தைப் பகுதியில் வைத்து 1 கிலோவும் 840 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா வைத்திருந்த நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழான புலனாய்வுப் பிரிவினருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த குடும்பஸ்தர் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுதுமலைப் பகுதியைச் சேர்ந்த சண்முகம் சிறிஸ்குமார் (வயது 49) என்ற குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.