யாழ்.குடாநாட்டில் தேங்காய்க்குத் தட்டுப்பாடு

Report Print Thamilin Tholan in சமூகம்
185Shares

யாழ்.குடாநாட்டில் தேங்காய்க்குத் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகக் கருத்தப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் முன்னர் மலை போன்று குவியல் குவியலாகக் தேங்காய் குவிக்கப்பட்டு வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் தேங்காய் விற்பனை வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.

இது தொடர்பில் வியாபாரிகளிடம் கேட்ட போது,

கடந்த சில தினங்களாகச் சந்தைக்குத் தேங்காய் வரத்து மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள வியாபாரிகள் யாழ்.குடாநாட்டில் அதிகமாகத் தேங்காய் விளையும் கொடிகாமம், பளை போன்ற பகுதிகளிலிருந்து தென்னிலங்கையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தேங்காய் கொள்வனவு செய்து செல்வதே விலை வீழ்ச்சிக்குக் காரணமெனத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குடாநாட்டிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் தேங்காய் விற்பனை குறைவடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments