மாலபே தனியார் பல்கலைக்கழக மேலாளரை நோக்கி துப்பாக்கி சூடு

Report Print Ajith Ajith in சமூகம்
596Shares

சைட்டம் என்ற மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் மேலாளர் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவத்தின்போது அவருக்கு பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை

இந்த சம்பவம் இன்று இரவு ஏற்பட்டுள்ளது. இனந்தெரியாதோர் இந்த தாக்குதலை மாலபே தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அருகில் வைத்து மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியை மூடிவிடுமாறு கோரி ஏனைய அரச பல்கலைக்கழங்கங்களின் மாணவர்களும் அரச வைத்தியர்களும் கோரி வருகின்ற நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Comments