காணிகளுக்காக போராடும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.
தமக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கேப்பாபுலவு போராட்டத்தில் கலந்துள்ள சிறுவர்கள் கடந்த ஒருவார காலமாக தமது முயற்சியில் கல்வி கற்று வந்துள்ளனர்.
அத்துடன், அவர்களுக்கு இன்று சிறப்பு கல்வி கற்பித்தல் ஏற்பாடு செய்துள்ளதாக முல்லைத்தீவு உதவி கல்விபணிமனை பணிப்பாளர் ஆதவன் கூறியுள்ளார்.
மேலும், குறித்த வகுப்புகளை இன்று பிற்பகல் கேப்பாப்புலவு மக்களின் போராட்ட இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.