வவுனியா அ.த.க பாடசாலையி ல் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நிகழ்வு

Report Print Theesan in சமூகம்
63Shares

வவுனியா - கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நிகழ்வு இன்று (06) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போட்டி நிகழ்வு பாடசாலை அதிபர் பு.கிருபராசா தலைமையில் நடைபெற்றது.

12 வயதுக்குட்பட்ட ஆண், பெண்களின் 100 மீற்றர் ஓட்டப்போட்டி, இடைவேளை நிகழ்வு , 6 வயதுக்குட்பட்ட ஆண் பெண்களின் கோபுரம் அமைத்தல், விநோத உடை, அஞ்சல் ஓட்டம் என பல்வேறு விளையாட்டுபோட்டிகள் இதன் போது இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், மாலதி முகுந்தன் வவுனியா வடக்கு பிரதி கல்விப்பணிப்பாளர், வவுனியா வடக்கு உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆர்.மங்களகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Comments