நாளை நாம் எடுக்கும் முடிவுகள் வித்தியாசப்படலாம்: அவற்றுக்கு பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளே

Report Print Mohan Mohan in சமூகம்
143Shares

கேப்பாபுலவில் தமது சொந்த நிலங்களை விமானப்படையினரிடம் இருந்து மீட்க ஒருவாரம் கழிந்தும் மக்கள் போராட்டத்தினை தொடர்கின்றனர்.

இந்த நிலையில் போராட்ட இடத்திற்கு இதுவரை வந்து சென்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இனி வரவுள்ள மக்கள் பிரதிநிதிகளையும் அன்புடன் வரவேற்கின்றனர். எனினும், யார்..? வந்தார்கள் யார்..? வரவில்லை என்ற கவலை தமக்கு இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் மக்களாகிய எமது போராட்டம் மூலம் எமது நிலங்களை நாமே மீட்கத்துணிந்து விட்டோம். மக்கள் பிரதிநிதிகள் எமது நிலைப்பாட்டை அரசாங்கத்திற்கு எடுத்துச்சொன்னால் போதும்.

இதனை தவிர அவர்களினால் இந்த காரியம் செய்துதர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. அவர்களை நாங்கள் ஒரு தூதுவர்களாகவே தற்பொழுது பார்க்கின்றோம்.

எமது நிலங்களை மீட்டுத்தர அவர்களினால் முடியும் என்றால் நாங்கள் இப்படி வீதிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா..?

உன்மையில் தமிழ்மக்கள் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்களை காக்கவேண்டு என்பது கடமை. அதை அவர்கள் சரிவர செய்வேண்டுமானால் பாரளுமன்றத்தில் எமது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லவேண்டும்.

இதுவரை எமது போராட்டத்தின் பின் எந்த அரசியல் சக்திகளும் இருக்கவில்லை. அதற்கு நாங்கள் இடமளிக்கவும் இல்லை இது எமது போராட்டம்.

மேலும், நாளை நாம் எடுக்கும் முடிவுகள் வித்தியாசப்படலாம் அவற்றுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் இதுவரை வந்து சென்ற மக்கள் பிரதிநிதிகளே என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments