திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் இன்றைய நிலை

Report Print Nesan Nesan in சமூகம்

ஒரு மதத்தின் புனிதத்தன்மையினை மதித்து நடக்கவேண்டியது அனைத்து மதங்களையும் பின்பற்றும் ஒவ்வொருவருவரினதும் கடமையாகும்.

அந்தவகையிலே திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசமானது மிகவும் காலத்தால் முற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித பிரதேசமாகும்.

இங்கு இயற்கையாகவே 7 கிணறுகள் உள்ளதுடன், அதில் இருந்து வரும் நீர் வெவ்வேறான சுடு நிலைகளை கொண்டதாகவும் அமைந்து காணப்படுவது அங்கு சென்று வரும் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

அவ்வாறான ஒரு அதிசயக்கத்தக்க வகையில் அமைந்திருக்கும் அந்த புனித பிரதேசத்தினை மதித்து நடக்கவேண்டியது மனிதர்களாகிய அனைவரிடத்திலும் இருப்பது கட்டாயமாகும்.

முன்பெல்லாம் இப்பிரதேசத்தினுள் புனிதமாக நடந்து கொண்ட மக்கள் இன்று அதனை அவமதிக்கும் விதமாக கால்களில் பாதணிகளை அணிந்து கொண்டு அந்த நீரால் தங்களது பாதணிக்கால்களை கழுவுவதென்பது அந்த இடத்தின் புனிதத்தன்மையை இல்லாது செய்யும் ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டி இருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அதன் புனிதத்தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.

இனிவரும் காலங்களில் உரியவர்கள் இந்த விடயத்தில் கவனம் எடுத்து செயற்பட்டு இந்த இடத்தின் புனிதத்தன்மையை காப்பாற்றுவார்களா? என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாகவும் மாறியுள்ளது.

Latest Offers

Comments