மணல் ஏற்றிச்சென்ற லொறி தடம் புரண்டு விபத்து

Report Print Thirumal Thirumal in சமூகம்

மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நேர்ந்துள்ளதாக திம்புள்ள - பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பன்றிகள் கூட்டமாக பிரதான வீதியை கடந்து செல்லும் போது அதை கண்டு லொறியை கட்டுப்படுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து லொறி குடைசாய்ந்ததாக லொறியின் ஓட்டுனர் குறிப்பிட்டுள்ளார்.

லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், எனினும் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

குறித்த லொறியில் இருந்த 3 கியூப் மணல் கொட்டி வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments