ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலையில்

Report Print Reeron Reeron in சமூகம்

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 06 பேரும் இன்றைய தினம் (22) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 6 சந்தேக நபர்களின் விசாரணைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் நீதிமன்றின் முன்னிலையில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை கடந்த 25 திகதி நீதிமன்றின் முன்னிலையில் குறித்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபரிடம் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments