விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பிகளை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தொப்பிகளை அனுப்ப முயற்சித்த போது கைது செய்யப்பட்ட விடுதலை புலிகளின் முன்னாள் குற்றப்புலனாய்வு உறுப்பினர் உட்பட 3 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல முன் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் அடிப்படை எதிர்ப்பை தாக்கல் செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
எனினும் நீதவான் அந்த அடிப்படை எதிர்ப்பை நிராகரித்துள்ளார்.