யாழ் பாடசாலைகளில் ஏற்பட்ட மாற்றம்! மகிழ்ச்சியில் அரசாங்கம்! சீரழியும் கொழும்பு மாணவர்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்

பிரபல பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெறும் வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு போட்டிகளின் போது ஒழுக்க விழுமியங்கள் மீறப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு இடையில் பிக்-மெச் எனும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன்போது கலாசாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் நடத்து கொள்வதாக மஹா சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பில் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் விளையாட்டு போட்டிகளின் போது நடந்து கொள்ளும் விதம் நாட்டுக்கும், மக்களுக்கும், கலாசாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இவ்வாறான நிலை தொடருமானால் அதனை தற்காலிகமாக நிறுத்துமாறு மஹா சங்கத்தை சேர்ந்த தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்தும். இது குறித்து பொலிஸ்மா அதிபர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறான போட்டிகளின் பழைய மாணவர்கள் தவறான வகையில் நடந்து கொள்வதாக தேரர்கள் குற்றம் சாட்டினர்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேரர்கள் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்புவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பாகும் என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளின் போது இடம்பெறும் சம்பவங்களை தடுக்க சகலதுறைகளும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல பாடசாலைகள் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளமை மகிழ்ச்சிகுரியதாகும் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

பாணந்துறையை சேர்ந்த சில பாடசாலைகளும் இவ்வாறான முடிவுக்கு இணக்கியுள்ளதாக அங்கு கருத்து வெளியிட்ட சங்கைக்குரிய குப்பியாவத்தை போதானந்த தேதர் சுட்டிக்காட்டினார்.

Comments