அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான காப்புறுதி திட்டம் : அமைச்சர் மகளுக்கு தரகுப்பணம்

Report Print Aasim in சமூகம்
32Shares

கண்டி - கொழும்புக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து நெடுஞ்சாலைகளின் போக்குவரத்திற்கான காப்புறுதியில் அமைச்சர் மகள் ஒருவர் தரகுப்பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் காணப்படும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நபர்கள் திடீர் விபத்துக்களில் சிக்கும் போது அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவான வகையில் காப்புறுதி திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதுவரை காலமும் இதற்கான காப்புறுதி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி திணைக்களத்தினால் நேரடியாக பெற்றுக் கொள்ளப்பட்டிருந்ததுடன், அதற்கான தரகுப்பணம் திணைக்களத்தின் ஊழியர்களின் நலன்புரி நிதியமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் நடப்பு ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள் காப்புறுதி திட்டம் தனியார் காப்புறுதி முகவர் சேவை ஒன்றின் ஊடாக தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சர் ஒருவரின் மகளுக்கு 300 மில்லியன் ரூபா, தரகுப்பணமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Comments