கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முல்லை மாவட்ட செயலகத்திற்கு முன் போராட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்
25Shares

கேப்பாப்புலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

கேப்பாப்புலவில் இன்றுடன் 23ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்ற நிலையில், இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டமானது இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்த கோரிக்கைகளுக்கு நல்லாட்சி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments