இரண்டாவது நாளாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம்

Report Print Kumar in சமூகம்

உடனடி நியமனங்ளை வழங்கக் கோரி மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலிறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று காலை குறித்த போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை இன்று நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் 1600க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளதாகவும் தங்களது எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமது நியாயமான கோரிக்கைகளை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக புறந்தள்ளிவருவதாகவும், தேர்தல் காலங்கள் வரும்போது மட்டும் தங்களை நாடிவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டம் நடாத்தவேண்டிய நிலையேற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.

அரசாங்கம் தனது தொழில் கொள்ளையினை மாற்றும்போதே இவ்வாறான பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Comments