ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொலை : குற்றவாளிக்கு மரண தண்டனை

Report Print Ramya in சமூகம்

கம்பஹா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரை கொலை செய்த சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் 2007ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மற்றைய சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Comments