அபகீர்த்தி ஏற்படுத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் : சிஹாப்தீன்

Report Print Navoj in சமூகம்
22Shares

கிழக்கு முதலமைச்சர் மற்றும் மாவட்ட அரசியல்வாதிகளுக்கு முகநூலினூடாக அபகீர்த்தி ஏற்படுத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசபை செயலாளர் மற்றும் சக ஊழியர்களின் செயற்பாடுகள் குறித்து இனம் தெரியாத நபர் முகநூல் பக்கத்தினூடாக பல பிழையான தகவல்கள் வெளியிடுவதை கண்டித்து இன்றைய தினம் கவனயீர்ப்பு பேரணியொன்று இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,

எனது நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பிரதேசசபையின் செயற்பாடுகளை ஒரு சிலர் குழப்பகரமான நிலைக்கு கொண்டு செல்ல எத்தனிக்கின்றனர்.

போலியான முகநூல் முகவரியை வைத்துக் கொண்டு பிரதேசசபையில் கடமை செய்யும் அனைவரையும் ஒரு பழமையான பார்வைக்குரியவர்கள் போன்ற கருத்துக்களை பதிவிடுகின்றனர்.

பிரதேசசபையில் பல்வேறுபட்ட குற்றச் சாட்டுக்களை வைத்து போலியான தகவல்களை பரப்பி வரும் நபர்கள் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி நேரடியாகவே பிரதேச சபைக்கு வருகை தந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

Comments