பல்கலைக்கழக பகிடிவதையுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு வகுப்புத் தடை

Report Print Aasim in சமூகம்
23Shares

பேராதனை பல்லைக்கழக பகிடிவதைச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு மூன்று மாத கால வகுப்புத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் பதினைந்து பேர் சேர்ந்து தனியார் வீடு ஒன்றில் புதிய மாணவர்களுக்கான பகிடிவதைக் கூடமொன்றை நடத்திவந்தமை அண்மையில் பகிரங்கமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த மாணவர்களின் பகிடிவதைக்கு உள்ளான எட்டு மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கண்டி போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை விட மனோரீதியான பாதிப்புகளுக்கான உளவியல் சிகிச்சையே அளிக்க வேண்டியிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட மாணவர்கள் பதினைந்து பேருக்கும் இன்று முதல் மூன்று மாத கால வகுப்புத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணையின்போது அவர்கள் குற்றவாளிகளாக காணப்படும் பட்சத்தில் பல்கலைக்கழக மாணவ அனுமதி ரத்துச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments