​குவைத்தில் இன்னல்களுக்கு முகங்கொடுத்த பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

Report Print Ramya in சமூகம்
72Shares

குவைத்தில் பாலியல் ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையில் இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான விசேட விமானம மூலமே இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு 122 இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களுக்குள், குவைத்தில் துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுக்கும் மேலும் 81 இலங்கை பிரஜைகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடு திரும்பிய பெண்கள் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments