மயானத்தில் மாயமான பொருட்கள்

Report Print Theesan in சமூகம்
65Shares

வவுனியா வேப்பங்குளம் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சில காணாமல் போயுள்ளன.

குறித்த மயானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மயானத்திலுள்ள வேலியை அண்டிய சில பகுதிகளில் தோண்டும் பணிகள் இன்று இடம்பெற்றது. இதன்போது எந்த விதமான பொருட்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயானத்திற்குச் சென்ற பொலிசார், விஷேட அதிரடிப்படையினர், வவுனியா பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள் கிராமசேவையாளர், தொல்பொருள் ஆராய்சியாளர், மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர் முன்னிலையில் மயானத்தை தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் தோண்டப்பட்டு அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் காணாமற்போயிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இடத்தில் பொருட்கள் எதுவும் காணப்படாத நிலையில் கிடங்கு மீண்டும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments