கொட்டகலை வனப்பகுதியில் தீ : ஐந்து ஏக்கர் புல் எரிந்து நாசம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
14Shares

கொட்டகலை, ரொசிட்டா கால்நடை வளர்ப்பு புல் வனப்பகுதியில் இன்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கால்நடை வளர்ப்பு பண்ணைக்குரிய ஐந்து ஏக்கருக்கும் அதிகமான புல் வனப்பகுதியில் தீப்பரவியுள்ளது.

இந்த ரொசிட்டா கால்நடை பண்ணை ஊழியர்களும் திம்புள்ள - பத்தனை பொலிஸாரும் இணைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை வறட்சியான காலப்பகுதி நிலவி வருவதால் ரொசிட்டா கால்நடை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வருகின்ற மாடுகளுக்கு புல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், குறித்த மாடுகளுக்கு புல் வெட்டும் வனப்பகுதியே இவ்வாறு தீ பிடித்துள்ளது.

இதனால் கால்நடை வளர்ப்புகளுக்கான புற்கள் வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக பண்ணையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Comments