ரவிராஜ் படுகொலை: விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றில்

Report Print Vino in சமூகம்
54Shares

ரவிராஜ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் அவரது மனைவி வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்திருந்த திருத்தப்பட்ட மனுவை இன்று நீதிமன்றம் ஆராய்ந்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 5 பேர் மற்றும் சட்டமா அதிபரை எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி ஏழு பேர் அடங்கிய சிறப்பு ஜூரிகள் சபையின் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அவர்களை விடுதலை செய்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்துச்செய்யுமாறு கோரியே அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments