சட்டவிரோதமான முறையில் இலங்கைத் தமிழர்களை கனடாவிற்கு கப்பல் மூலம் கடத்த முற்பட்ட இலங்கையரின் வழக்கு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குணாரொபின்சன் கிருஸ்துராஜா என்ற இலங்கையருக்கு ஜூரிகள் சபையால் தீர்ப்பு வழங்க முடியாத நிலையிலேயே இந்த வழக்கு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் கனடா உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
2010ம் ஆண்டு தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமான முறையில் 492 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை கனடாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் என குறித்த நபர் உள்ளிட்ட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இருப்பினும் ஏனைய சந்தேகநபர்கள் மூவரையும் ஜூரிகள் சபை விடுதலை செய்தது.
குணாரொபின்சன் கிருஸ்துராஜா ஆறு வருட சிறைத் தண்டனை அனுபவித்ததை அடுத்து கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.